பிரதமரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை – மஹிந்த தேசப்பிரிய

0 218

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் இன்று கையளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் குழு மாவட்ட மட்டத்தில் பெற்றுக்கொண்ட கருத்துக்களையும் யோசனைகளையும் உள்வாங்கியுள்ளது.

அதேபோல் பல்வேறு தரப்புக்கள் முன்வைத்துள்ள கருத்துக்களும் யோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.

இவற்றை மீளாய்வு செய்து மாவட்ட மட்டத்திலான எல்லை நிர்ணய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அடுத்த மாதம் 31ஆம் திகதியளவில் எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கையை கையளிக்க எதிர்பார்ப்பதாக மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.