பிரான்ஸை மீண்டும் திணற வைக்கும் கொரோனா – நாளொன்றுக்கு சுமார் பத்தாயிரம் பேருக்கு தொற்று.
பிரான்ஸில் நாளுக்கு நாள் சராசரி 10 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் அந்த நாட்டு அரசினால் வெளியிடப்பட்ட அரச தகவல்களுக்கமைய இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆந்த தகவல்ககளின்படி , 9937 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது ஒரு இலட்சத்தி 27326 பேர் என்ற எண்ணிக்கையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தொற்றுக்குள்ளானவர்களில் 27 பேர் நேற்றயதினம் உயிரிழந்துள்ளதாகவும் பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.
இதனுடன் சேர்த்து பிரான்சில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165267 பேராக் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொரோனாத் தொற்றினால் 13281 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 760 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பிரான்சின் கொரோனாத் தொற்று விகிதம் 54.34 வீதமாக உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றானது சீனாவின், ஊபேய் மாகாணத்தின் தலைநகரான ஊகானில் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடரந்து உலகம் முழுக்க பரவிய இந்த தொற்றானது பல இலட்சக்கணக்கான உயிர்களை கொத்துக் கொத்தாக பறித்திருந்தது.
இதன் விளைவாக உலக நாடுகளின் தீவிர முயற்சிகளில் இந்த நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டது.
எனினும் 4 வருடங்கள் ஆகியுள்ள போதும் இதுவரையில் கொரோணா தொற்று கட்டுப்படுத்த முடியாதுள்ளது.
இந்த நிலையிலேயே பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோணா தொற்று தீவிரமடைந்து வருவதாக அந்த நாட்டு அரச தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.