டிரம்பின் வெற்றியால் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு!

0 7

அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றியடைந்ததால் கிரிப்டோகரன்சியில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கிரிப்டோவின் முன்னணி காயினான பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

அமெரிக்க டொலர் மதிப்பில் 88,817 டொலர்களை எட்டி கிரிப்டோ சந்தையில் முதலிடத்தில் உள்ளது.
இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75.62 லட்சம் ஆகும். 1,00,000 டொலரை நெருங்கிக்கொண்டிருக்கும் பிட்காயின் மதிப்பு கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

கிரிப்டோகரன்சியை ஆதரிக்கப்போவதாகத் தனது பிரசாரத்தில் டிரம்ப் சொன்னதே பிட்காயின் வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி பிட்காயின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.75 டிரில்லியன் ஆக உள்ளது. எனவே வெள்ளியின் சந்தை மதிப்பான 1.729 டிரில்லியன் டாலரை தற்போது பிட்காயின் சந்தை மதிப்பு ஓவர்டேக் செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.