குமுறும் எரிமலையால் விமான சேவைகள் இரத்து
இந்தோனேசியாவின் பாலி சுற்றுலா தீவுக்கான விமான சேவைகளை பல சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எரிமலை சாம்பல் வானில் 10 கிலோ மீற்றர் (32,808 அடி) உயரத்திற்கு படர்ந்து காணப்படுவதால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வானத்தில் எரிமலை சாம்பல் சூழ்ந்து காணப்படுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பாலிக்கு விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டதாக விமான சேவைகள் தெரிவித்துள்ளன.
கடந்த 4 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கான 80 விமானங்கள் பாலியில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.