ஹெய்ட்டியில் ஆயுதகுழுக்களால் 100க்கும் அதிகமானவர் படுகொலை – சர்வதேச ஊடகங்கள்
ஹெய்ட்டில் ஆயுத குழுக்கள் வார இறுதியில் 110 பேரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெய்;ட்டியின் தலைநகரில் வறியமக்கள் வசிக்கும் பகுதியில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
உள்ளுர் கும்பலொன்றி;ன்தலைவரின் தனி;ப்பட்ட பழிவாங்கும் செயல் இதுவென தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வார்வ் ஜெரெமி குழுவின் தலைவர் மொனெல் மிக்கானோ பெலிக்ஸ் தனது பிள்ளை உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த படுகொலைக்கு உத்தரவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பில்லிசூன்யம் செய்பவரிடம் பெலிக்ஸ் தனது உடல்நிலை குறித்து தெரிவித்தவேளை அவர் அந்த பகுதியை சேர்ந்த முதியவர்கள் பில்லிசூன்யம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தனது பிள்ளை இறந்ததை தொடர்ந்து உள்ளுர் வன்முறை கும்பலின் தலைவர் படுகொலைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது 60வயதுக்கும் மேற்பட்ட 60 பேர் வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் சனிக்கிழமை 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சொலெயில் என்ற வறிய மக்கள் அதிகம் வாழும் நகரத்திலேயே இந்த வன்முறை இடம்பெற்றுள்ளது