வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பூஜை.
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று(வியாழக்கிழமை) காலை வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.
ஆலய பிரதம குரு கருனாநந்த குருக்கள் தலைமையில் பொங்கல் பொங்கி விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட நிலையில் சுகாதார வழிமுறைகளுடன் இம் முறை ஆலயத்தில் தைப்பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் மன்னாரில் உள்ள இந்து,கத்தோழிக்க ஆலயங்களிலும் பொங்கல் பொங்கி விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் அமைதியான முறையில் பொங்கல் திருநாளை கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.