தந்தையை அடித்து கொலை செய்த மகன் – யாழில் சோகம்.
குடும்பத் தகராறு காரணமாக மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் கலாசாலை வீதி பாரதிபுரம் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய இராசமணி இரத்தினசிங்கம் என்பவரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேரும் தெரியவருவதாவது,
நேற்றிரவு வீட்டுக்கு மதுபோதையில் சென்ற இரத்தினசிங்கம் மனைவியுடன் முரண்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் பணியாற்றும் மனைவி வீடு திரும்பிய போது தகாத வார்த்தைகளால் தந்தை கேட்டதால் ஆத்திரமடைந்த மகன் ஒருவர் அவரை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.
அத்துடன், மைத்துனர் ஒருவரும் அவரைத் தாக்கியதாக கூறபப்டுகின்றது.
நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் தாக்குதலுக்கு உள்ளான இரத்தினசிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத பொலிஸார் தந்தையைக் கொலை செய்த மகன் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் நீதிவான், உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.