இந்தியாவில் இருந்து வந்து இலங்கையில் சங்கமம்! எப்படி வந்தது?

0 331

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பை அண்மித்து சில்லாலை பகுதியில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று காலை சில்லாலை பகுதியில் கடற்படையினர் தேடுதலை ஆரம்பித்தனர்.

இதன்போது கவனிப்பாரற்று காணப்பட்ட பொதிகள் சிலவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த 240 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருளை படையினர் மீட்டுள்ளனர்.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

பின்னர் பொலிஸாரினால் யாழ் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று மாலை கைப்பற்றப்பட்ட 240 கிலோ கஞ்சாவும் கடற்படையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டன.

எவ்வாறாயினும் இவை இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் இது குறித்த விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.