QR முறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்..

0 232

தேசிய எரிபொருள் உரிமம் தொடர்பான QR முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் உரிமம் தொடர்பான QR முறைமை குறித்து அவர் இட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தரவுகளை ஆய்வு செய்து படிப்படியாக எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நிதியமைச்சு மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து தற்போதைய முறைமை தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.