பள்ளி சென்றால் விசம் வைப்போம் – ஈரானில் அரங்கேறிவரும் கொடுமை..
ஈரானில் பாடசாலைக்கு மாணவிகளுக்கு அந்த நாட்டு மத அடிப்படைவாதிகள் சிலர் விஷம் வைத்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
ஈரானில் ஆடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினி என்ற யுவதி ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.
குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
ஹிஜாப்பை சரியாக அணிய வில்லை எனக் கூறி கைதுசெய்த பொலிஸ் அதிகாரகள் அவரை கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார்.
இதன் விளைவாக ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானிய பெண்கள் அங்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் இந்த போராட்டத்தில் 300 பேரருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பலருக்கு பலருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை அறிவித்துள்ளது.
எனினும் இவற்றின்; அதிகாரபூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.
பெண் கல்வி, பெண்கள்முன்னேற்றத்துக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை வழங்கி வரும் ஈரானில் தற்போது மிக மோசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையிலையே பாடசாலைக்கு செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மத அடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவங்கள் அங்கு அரங்கேறியுள்ளன.
இதுகுறித்து சர்வதேச ஊடக அரங்கில் கூறப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக பாடசாலைக்கு செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது.
வயிற்றுவலி, தலைவலி, வாந்தி,மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் உடலில்விஷம் கலந்து இருந்தது தெரிந்தது.
மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ள தகவலை ஈரான் கல்வித்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.