வடகொரியா ஏவுகணை தாக்குதல் – திட்டமிடபடி கூட்டு பயிற்சியை நடாத்துமாறு தென்கொரியா உத்தரவு.
ஐப்பானுக்கு சொந்தமான கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதித்தள்ளது.
பியோங்யாவில் இருந்து ஏவப்பட்ட குறித்த ஏவுகணையினை ஜப்பான் மற்றும் தென் கொரிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி வடகொரியா ஏவிய இந்த நீண்ட தூர ஏவுகனை சுமார் 620 மைல் பறந்து ஜப்பானுக்கு மேற்கே உள்ள கடல் பகுதியில் தரையிறங்கியுள்ளது.
கொரிய தீபகற்பத்தை சுற்றி அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் கடற்படைக் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பயிற்சிகள் ஆத்திரமூட்டக்கூடியதாக வடகொரியா தொடர்ந்து கூறி வருகின்றது.
இந்த நிலையில் அதனை எதிர்க்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை பரிசேதனைகளை முன்னெடுத்து வருகின்றது.
அதன்படி கடந்த வாரம் கிழக்கு கடற்கரையில் உள்ள பியாங்யாங்கிலிருந்து சர்வதேச நேரப்படி இரவு 10 மணிக்கு ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது ஐ.சி.பி.எம் வகை ஏவுகணை எனவும் இந்த ஏவுகணை சுமார் 70 நிமிடங்களுக்கு 60 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மேல் பறந்ததாகவும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த ஏவுகணை ஏவப்பட்டதை தொடர்ந்து தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் திட்டமிட்டபடி அமெரிக்க கூட்டுப் பயிற்சிகளைத் தொடருமாறு தனது நாட்டின் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் வடகொரியா அரசு அதன் ‘பொறுப்பற்ற செயல்களுக்கு’ பொறுப்பேற்கும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் வட கொரியாவின் வேகமான இந்த ஏவுகணை நடவடிக்கைக்கு ஜப்பான் பிரதமருக்கும் தென்கொரிய அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பே முதன்மையான காரணம் என கூறபப்டகின்றது.
இந்த சந்திப்பானது தென் கொரியா மற்றும் ஜப்பானின் இணக்கப்பாட்டில் ஒரு ‘மைல்கல்’ ஆக எதிர்பார்க்கப்படுகின்றது.
வட கொரியாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான பாதுகாப்பு உறவுகள் மற்றும் இராணுவ ஒத்துழைப்பை இந்த சந்திப்பு ஏற்படுத்தும் எனவும் எதிர்பாரக்கப்படுகின்றமை குறிப்பிடத்தகக்து.