கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளுக்கு புடின் ரகசியப் பயணம்.
ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல், துறைமுகத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த துறைமுகப் பகுதியில் இரவு நேரத்தில் புடின் தெருக்களில் காரை ஓட்டி எல்வதுடன் மக்களிடம் பேசுவதான கானொளியொன்றை கிரெம்ளின் வெளியிட்டள்ளது.
அந்த கானெளியில் ரஷ;யாவின் துணைப் பிரதமர் மராட் குஸ்னுலினும் காரில் உள்ளார்.
புடினின் இந்த விஜயம் நேற்றதினம் நடந்ததாகவும் கிரெம்ளின் உத்தியோகபூர்வமாக அறிவித்தள்ளது.
புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிரதேசத்திற்கு இது அவரது முதல் பயணம் என நம்பப்படுகிறது.
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மரியுபோல் செல்வதற்கான புடினின் முடிவு அவரது தன்னிச்சையான முடிவு எனவும் கூறப்பட்டுள்ளது.
அங்கு சென்ற ரஷ்ய ஜனாதிபதி மரியுபோலுக்கு கிழக்கே உள்ள ரஷ்ய நகரமான ரோஸ்டோவ்- ஆன் -டானில் நிலைகொண்டுள்ள உயர் இராணுவ தளபதிகளை சந்தித்ததாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை புடின் உலங்கு வானூர்தி மூலம் மரியுபோல் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.
எவ்வாறாயினும் மோதலின் மிக நீண்ட பேரழிவிற்குப் பிறகு உக்ரைனின் மரியுபோல் 10 மாதங்களுக்கும் மேலாக ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.
அங்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது.
இதேவேளை 90 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.நா பாதுகாப்புச்சபை அறிவித்துளமை குறிப்பிடத்தக்கது.