பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அட்டூழியங்கள்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், இலங்கை அரசாங்கம், தாம் தமிழ் மக்களோடு சுமுகமாக செயற்பட்டு வருவடாக தொடர்ந்து தம்மை வெளிப்படுத்தி வருகிறது. இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்கு முதற்கொண்ட சர்வதேசமும் நம்பிக்கொண்டு, நீதிக்காக போராடி வரும் தமிழ் மக்களை காலம் காலமாக ஏமாற்றி வருகிறது.
2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவடைந்து, இன்றுடன் சரியாக 14 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் யுத்தத்தால் பாதிகாப் பட்ட மக்கள் இலங்கை அரசிடம் இருந்தோ, அல்லது சர்வதேசத்திடம் இருந்தோ எந்த தீர்வையோ அல்லது நீதியையோ இன்றுவரை பெற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னர், இலங்கை அரசாங்கம் தனது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் மூலம் தொடர்ச்சியான இந அழிப்பை தொடர்ந்துகொண்டே வருகின்றது. ஒரு தமிழ் மகன் இன்றைக்கும் வெளியே சென்று வீடு திரும்புவது என்பது பல இடங்களில் சவால் மிக்க ஒன்றாகவே கருதப்படுகின்றது.
தமிழ் மக்களுக்காகவும், தமிழ் சமூகத்துக்காகவும் யார்? யார்? குரல் கொடுக்கிறார்களோ அவர்களில் குரவளையை பிரித்து நெரித்து அவர்களின் குரலை நசுக்கும் செயற்பாடுகளை, பொலிஸ் மற்றும் இராணுவம் கச்சிதமாக செய்து வருகின்றது.
2023 May 18 அதாவது இன்றைய தினம், இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பை நினைவு கூர்வதற்காக ஒன்றுகூடிய பல இளைஞர்கள் அச்சுறுத்தலுக்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ள சம்பவங்கள் பல இடங்களில் பதிவாகி உள்ளது.
ஆயுத வழியிலான உள்நாட்டு போர் நிறைவுக்கு வந்தாலும், இராணுவத்தினரும் பொலிஸாரும் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகவே பார்த்து அவர்கள் மீது தொடர்ச்சியாக வெளிப்படையாகவும் மறை முகமாகவும் பல அடக்குமுறைகளை ஏவி வருகின்றார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
2009க்கு பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் அதிகப்படியான இருப்பு, நிலம் கைப்பற்றல் போன்றவையும் தொடர்ந்தும் நீதித்துக்கொண்டேன் இருக்கின்றது. இதற்கான தீர்வு சர்வதேசத்தின் கையில் மட்டுமே உள்ளது.
இராணுவம், பொலிஸார், புலனாய்வு பிரிவினர் என அரச படைகள் ஆயுதங்களை கொண்டு அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம்(PTA) போன்ற சட்டங்களை பயன்படுத்தி அட்டுழியங்களையும் அடக்குமுறைகளையும் செய்துவருகின்றது என்பதை சர்வதேசம் தான் உணர்த்துக்கொள்ளவேண்டும்.